இலங்கை வருகிறார் லக்ஸம்பேர்க்கின் வெளிவிவகார அமைச்சர்
In இலங்கை January 30, 2020 3:32 am GMT 0 Comments 1529 by : Yuganthini

லக்ஸம்பேர்க் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜீன் அசெல்போர்ன், இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அமைச்சர் ஜீன் அசெல்போர்ன், இன்றும் நாளையும் நாட்டில் தங்கியிருப்பார் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு இலங்கைக்கு வருகை தரும் அவர், ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.