இலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமர் பங்குகொள்ளும் நிகழ்வுகள் குறித்த விபரம்!
In இலங்கை February 20, 2021 3:49 am GMT 0 Comments 1381 by : Dhackshala

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது அவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின்போது அவர் கலந்துக்கொள்ளவுள்ள நிகழ்வுகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவர்,
2021.02.23 – பிற்பகல் 4.15 – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளதுடன், இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் பிரதமரரை வரவேற்கவுள்ளார். பின்னர் இராணுவத்தினரின் மரியாதை அணிவகுப்பு இடம்பெறும்.
2021.02.23-மாலை 6.00 – அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பு
2021.02.23-மாலை 6.30- அலரிமாளிகையில் அமைச்சர்கள் ஒன்றிணைந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தல்.
2021.02.24-முற்பகல்10.30- ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் சந்திப்பு.
2021.02.24-முற்பகல் 11.30- சங்ரில்லா ஹோட்டலில் இடம்பெறும் வணிகம் மற்றும் முதலீடு நிகழ்வில் கலந்துகொள்ளல்.
2021.02.24- பிற்பகல் 12.30 – சபாநாயகர் மற்றும் விளையாட்டு அமைச்சரினால் வழங்கப்படும் விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளல்
2021.02.24- பிற்பகல்12.30- நாவல – கிரிமண்டல மாவத்தையில் உயர் மட்டத்திலான மைதானம் ஒன்றை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்.
2021.02.24-பிற்பகல் 3 .00 – கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியேறவுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.