இலங்கை வான்வெளியில் ட்ரோன் கமரா மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை
In இலங்கை April 25, 2019 2:46 am GMT 0 Comments 1872 by : Dhackshala

இலங்கை வான்வெளியினுள் அனைத்து ட்ரோன் கமராக்கல் மற்றும் ஆளில்லா விமானங்களும் பறப்பதற்கும் மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிவில் விமான சேவை அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 359 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன் 300 பேர் வரையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதல்களை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரிகளின் பெயர் விபரங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அந்த தகவல்கள் இலங்கை மக்களுக்கு அதிர்ச்சியையும் அச்சத்தையும் உண்டாக்கியுள்ளது.
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டு வருவதுடன் சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனும் அச்சத்தில் இலங்கை தற்போது காணப்படுகின்றமையினால் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.