இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – கரு ஜயசூரிய
In இலங்கை December 22, 2020 10:05 am GMT 0 Comments 1506 by : Dhackshala

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பாக இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு நியாயமானதும் விரைவானதுமான தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியிருக்கிறார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானம் எவ்வித விஞ்ஞான அடிப்படைகளையும் கொண்டிராத அதேவேளை, அதனால் எவ்வித பயனுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் கொள்கை, உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுகாதார வழிகாட்டல்களுக்கு முற்றிலும் முரணானதாகும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயத்தில் அரசாங்கம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டின் பயனற்றதன்மை தொடர்பில் பேராசிரியர் மலிக் பீரிஸும் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனவே, இவ்விவகாரத்தில் விஞ்ஞானபூர்வமாக முடிவொன்றுக்கு வருவதுடன், இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு விரைவான தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Sri Lanka’s anti-burial policy of Covid-19 bodies is against all international guidelines, including that of WHO. Expert virologist, Prof. Malik Peiris too showed the futility of this stance. Science must prevail, and the Muslims in Sri Lanka must be given a quick solution.
— Karu Jayasuriya (@KaruOnline) December 21, 2020
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.