முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானியை குற்றவாளியாக அறிவித்தது நீதிமன்றம்
In இலங்கை December 19, 2019 8:04 am GMT 0 Comments 1708 by : Jeyachandran Vithushan

முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி பேராசிரியர் ஐ.எம்.கே மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியோர் குற்றவாளிகளாக நீதிமன்றினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கொழும்பு மூவரடங்கிய (சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன) விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஐ.கே.மஹனாமாவுக்கு 20 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையும், 65,000 ரூபாய் அபராதமும் பியதாச திஸாநாயக்கவுக்கு 12 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையும், 55,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது
இந்திய நிறுவனம் ஒன்றிடமிருந்து 2 கோடி ரூபாய் இலஞ்சமான பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இதன்பின்னர் குறித்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் கடந்த 4 ஆம் திகதி நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.