இலஞ்ச ஊழலை ஒழிப்பதற்கு தேசிய செயற்திட்டம்!
In இலங்கை March 9, 2018 6:37 am GMT 0 Comments 1381 by : Ravivarman

இலஞ்ச ஊழல் மோசடிகளை நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி சரத் ஜயமான தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மறுசீரமைக்கப்படும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு இலஞ்ச ஊழல் விசாரணைச் செயற்பாடுகளையும் வழக்குத் தொடுக்கும் நடைமுறைகளையும் மேலும் வலுவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பாரதூரமான ஊழல் மோசடி வழக்குகளை மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு முன்னிலையில் விசாரிக்கும் திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் சட்டத்தரணி சரத் ஜயமான மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.