இலத்திரனியல் கார்த் தொழிற்சாலையை சிங்கப்பூரில் நிறுவவுள்ள டைசன் நிறுவனம்

பிரித்தானிய வர்த்தக நிறுவனமான டைசன் தமது இலத்திரனியல் கார்களை உற்பத்தியும் தொழிற்சாலையை சிங்கப்பூரில் அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
டைசன் நிறுவனத்தின் இத்தீர்மானம் பிரித்தானியாவில் ஒரு தளம் அமைவதற்கான நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
தமது வாகன உற்பத்தி தொழிற்சாலையை சிங்கப்பூரில் நிர்மாணிப்பதற்கான முடிவை நிறுவனத்தின் குழு இன்று தமது ஊழியர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளது.
இத்தொழிற்சாலை 2020 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொழிற்சாலை டைசன் நிறுவனத்தின் £2.5 பில்லியன் பெறுமதியுள்ள புதிய தொழிலநுட்பத்துக்கான உலகளாவிய முதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
2021 ஆம் ஆண்டு டைசன் நிறுவனத்தின் இலத்திரனியல் வாகனங்கள் சந்தைக்கு வருமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.