இளம்பெண்ணை கைவிட்ட அரசு காப்பகம்: மன்னிப்பு கோரினார் அமைச்சர்!

இளம்பெண், கர்ப்பமாக இருந்த ஒரு பதின்ம வயது சிறுமி உள்ளிட்டவர்களை கைவிட்ட அரசு காப்பகத்தின் செயற்பாடுகளுக்கு கனடாவின் Yukon மாகாணத்தின் அமைச்சர் ஒருவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
அரசு காப்பகங்களில் இளைஞர்களும் சிறுவர்களும் நடத்தப்படும் விதம் குறித்து பிரபல கனடா ஊடகம் ஒன்று நடத்திய ஆய்வில், ஒரு சிறுவன் கழுத்தை நெரிக்கப்பட்டது, பாலியல் துஷ்பிரயோக அபாயத்திலிருந்த ஒரு இளம்பெண் காப்பகத்திற்குள் அனுமதிக்கப்படாதது, கர்ப்பமாக இருந்த ஒரு பதின்ம வயது சிறுமி காப்பக ஊழியரால் தள்ளி விடப்பட்டது உட்பட பல சம்பவங்கள் வெளியாகின.
அது மட்டுமின்றி இரு இளைஞர்கள் காப்பகத்தை விட்டு வெளியேற்றப்பட்டு -25 டிகிரி கடுங்குளிரில் தவிக்க விடப்பட்டிருந்தனர். இந்த சம்பவங்கள் குறித்து வெளியான அறிக்கை, Yukon மாகாணத்தின் சுகாதார மற்றும் சமூக சேவைகள் துறை அமைச்சர் Pauline Frost சம்பவங்களுக்கு பொறுப்பேற்று மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தியது.
இந்த நிலையில் அமைச்சர் Pauline Frost அரசு காப்பகங்களில் சில இளைஞர்கள் நடத்தப்பட்ட விதத்திற்காக வெளிப்படையாக மன்னிப்புக் கோரியதோடு காப்பகங்கள் மோசமான நிலையில் இருப்பதோடு அவற்றில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்.
மோசமாக நடத்தப்பட்ட இளைஞர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன், Yukon அரசுதான் உங்களுக்குப் பொறுப்பு, ஆனால் நாங்கள் உங்களைக் கைவிட்டு விட்டோம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.