ஈட்டோபிக்கோ கத்திக் குத்து: பொலிஸார் தீவிர விசாரணை

ஈட்டோபிக்கோ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துச் சம்பவத்தில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதான வீதி மற்றும் போவாய்ர்ட் ட்ரைவ் கிழக்கு பகுதியில் குவாரி எட்ஜ் ட்ரைவ்வில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில், ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் உயிழந்துள்ளனர்.
சம்பவ தினத்தன்று இரவு 11.30 அளவில் பீல் பிராந்திய பொலிஸார், சம்பவ இடத்திற்கு குடும்பத் தகராறு காரணமாக அழைக்கப்பட்ட போது, வீட்டின் குளியல் அறையில் 47 வயது ஆண் ஒருவர் கத்திக் குத்துக் காயங்களுடன் காணப்பட்டதாகவும், அந்த ஆண் கைது செய்யப்பட்ட நிலையில், நள்ளிரவுக்கு சற்றுப் பின்னர், அங்கேயே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த வீட்டில் பாரதூரமான காயங்களுடன் காணப்படட பெண் ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அது மட்டுமின்றி அங்கே ஒரு சிறுவனும் சிறுமியும் காணப்பட்டதாகவும், பாரதூரமான காயங்களுடன் அயல் வீட்டுக்கு ஓடிச் சென்ற 12 வயதுச் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுவனின் உடல்நிலை தற்போது சீரடைந்துள்ளதாகவும், 3 வயதுச் சிறுமியும் அயல் வீடு ஒன்றுக்கு ஓடிச் சென்றதாகவும், அந்தச் சிறுமிக்கு காயங்கள் எவையும் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.