ஈராக்கின் அதி பாதுகாப்பு வலயத்தில் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா மீது ஈரான் சந்தேகம்!
ஈராக் தலைநகர் பக்தாத்தில் க்ரீன் சோன் (Green zone) எனப்படும் அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியில், ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இப்பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு, பயங்கர சத்தத்துடன் 2 முறை ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக்தாத்திற்கு மேற்கே இர்பில் மற்றும் அல் ஆசாத் எனும் இரண்டு அமெரிக்கா இராணுவத் தளங்கள் மீது, ஈரான் ஏவுகணை தாக்குலை நடத்திய 24 மணி நேரத்தில், இந்த பதில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாக்தாத்தில் அமெரிக்க ஏவுகணை தளம் உள்ளிட்ட வெளிநாட்டு தூதரகங்கள் ஆகியன அமைந்துள்ள அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியே க்ரீன் சோன் (Green zone) எனப்படும்.
இந்த தாக்குதலை அமெரிக்கா தான் நடத்தியிருக்கும் என ஈரான் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை அழிக்கும் நோக்குடன் ஈரான் படைகள் தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த புதன்கிழமை, ஈரான் இராணுவ தளபதியை அமெரிக்கா கொன்றதற்கு பதிலடி கொடுப்பதற்காக ஈராக்கிலுள்ள இரு அமெரிக்க இராணுவ நிலைகள் மீது ஈரான் 22 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 80 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இதனை அமெரிக்கா மறுத்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.