ஈரானிய அணு விஞ்ஞானியின் கொலை அப்பட்டமான உரிமை மீறல்- கட்டார் கண்டனம்!

ஈரானிய அணு இயற்பியலாளர் மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டமைக்கு கட்டார் அரசாங்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
அத்துடன், இது தெளிவான மனித உரிமை மீறல் என கட்டாரின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்தனி இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானின் வெளியுறவு அமைச்சர் முஹம்மது ஜவாத் ஷரீப்புடன் (Mohammad Javad Zarif) தொலைபேசியில் உரையாடிய அவர், ஃபக்ரிசாதே உயிரிழப்பு குறிப்பு இரங்க்ல தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானுக்கு கிழக்குப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ஃபக்ரிசாதே மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன.
ஃபக்ரிசாதே, இறுதியாக ஈரானின் பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு அமைப்பின் தலைவராகப் பணியாற்றினார்.
அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான ஈரானிய முயற்சிகளின் சூத்திரதாரி ஃபக்ரிசாதே என மேற்கு நாடுகள் நீண்ட காலமாக சந்தேகிக்கின்றன. ஆனால் ஈரான் அத்தகைய எந்தவொரு முயற்சியிலும் ஈடுபடவில்லை என மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.