ஈரானுக்கு எச்சரிக்கை!- விமான தாங்கி கப்பலை மத்திய கிழக்கில் நிலைநிறுத்தியது அமெரிக்கா

ஈரானுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையை விடுக்கும் வகையில் அமெரிக்கா விமானம் தாங்கி கப்பலொன்றை மத்திய கிழக்கில் நிலைநிறுத்தியுள்ளது.
ஈரானின் எச்சரிக்கைகளுக்கும், சகிப்புதன்மையற்ற தாக்குதல்களுக்கும் பதிலடி வழங்க தயார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தெரிவித்தார்.
ஈரான் ஆட்சியாளர்களுடன் அமெரிக்கா போரை விரும்பாத போதிலும், எவ்வித தாக்குதல்களையும் எதிர்கொள்ள தயார் என்பதை வெளிப்படுத்தவே அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போல்டன் குறிப்பிட்டார்.
வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே ஏற்கனவே பதற்றம் அதிகரித்துள்ள நிலையிலேயே விமானம் தாங்கி கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.