ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்வது குறித்து பைடன் அறிவிப்பு!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள ஜோ பைடன், ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்வது குறித்து இன்று இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின்போது கருத்துத் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், ஈரானுடனான 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை மீள அமுல்படுத்துவது மத்திய கிழக்கில் அணு ஆயுதப் போட்டியைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் குறித்த ஒப்பந்தத்தை கடுமையாக அமுல்படுத்த இணங்கினால் ஒப்பந்தத்துடன் அமெரிக்கா மீண்டும் சேரும் என பைடன் தெரிவித்துள்ளார்.
தம்மீதான பொருளாதாரத் தடைகளைக் குறைக்க முடியும் என்ற நிலையில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் அமுலில் இருந்தது.
எனினும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாக இந்த ஒப்பந்தத்திலிருந்து 2018இல் விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.