பிரார்த்தனையின்போது சுவர் இடிந்து வீழ்ந்தது: 13 பேர் உயிரிழப்பு

தென்னாபிரிக்காவில் கிறிஸ்தவ தேவாலயமொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்து 13 பேர் உயிரிழந்துள்ளனர். 29 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. தென்னாபிரிக்காவின் கரையோர மாகாணமான கவஸூலு நடாலில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், நேற்றிரவு இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.
சுவர் இடிந்து வீழ்ந்தபோது சிலர் உறங்கிக்கொண்டிருந்ததாகவும், அதனாலேயே பாதிப்பு அதிகமாகியுள்ளதென்றும் உள்ளூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வார இறுதி நாட்களில் தொடர் பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது. இதன்போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, பெரிய வெள்ளியான இன்று, தேவாலயத்தின் முன் பாரிய கூடாரம் அமைக்கப்பட்டு பிரார்த்தனை இடம்பெற்று வருவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.