உச்ச கட்ட பாதுகாப்பில் நாடாளுமன்றம்!
In ஆசிரியர் தெரிவு May 6, 2019 1:34 am GMT 0 Comments 2683 by : Yuganthini
இலங்கை நாடாளுமன்றமும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் தாக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சி.சி.ரி.வி.கமராக்களும் அதிகம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் ஸ்கேனர்கள், பாதுகாப்பு சார்ந்த உபகரணங்கள் உள்ளிட்ட சில முக்கிய பொருட்களை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்று வரும் கலந்துயாடலை தொடர்ந்தே நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.