உடன்பாடொன்றுடன் பிரெக்ஸிற் இடம்பெறுவதை உறுதி செய்ய ஜேர்மனி உதவும்
In இங்கிலாந்து January 17, 2019 3:09 pm GMT 0 Comments 1691 by : shiyani

உடன்படிக்கை மூலம் பிரித்தானியா வெளியேறுவதை உறுதி செய்ய தம்மால் இயன்றதை நிச்சயமாக செய்வோம் என ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்க்கோ மாஸ் இன்று தெரிவித்தார்.
ஆனாலும் பிரெக்ஸிற்றுக்கு இன்னும் குறுகிய காலமே எஞ்சியுள்ள நிலையிலும் பிரித்தானிய பாராளுமன்றத்தில் உடன்பாடும் எதுவும் எட்டப்படாத காரணத்தால் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான தயார்ப்படுத்தல் நடவடிக்கைகளை தாம் விஸ்தரிக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய ஹெய்க்கோ மாஸ் கூறியதாவது,
”நாங்கள் அனைத்து சூழ்நிலைகளுக்கும் தயாராக இருக்கிறோம், உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கு தொடர்ந்தும் எம்மை தயார்ப்படுத்தி வருகிறோம், எமது குடிமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சாத்தியமான அளவிற்கு எந்தவொரு எதிர்மறையான தாக்கத்தையும் தடுப்பதே எமது குறிக்கோளாகும்”.
“தமது அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை பிரித்தானியா தான் கூற வேண்டும், பிரெக்ஸிற்றுக்கான காலக்கெடுவை நீடிக்க விரும்புகிறீர்களா என்பதை அவர்களே தெளிவுபடுத்தவேண்டும்”.
“ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் இடம்பெறவுள்ளதை ஐரோப்பிய ஒன்றியம் நினைவில் கொள்ள வேண்டும்”.
“இந்த நடைமுறையிலிருந்து கிடைத்த ஒரேயொரு நன்மை என்னவென்றால் மீதமுள்ள 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் ஒற்றுமையாக செயற்படுவது தான். பிரெக்ஸிற்றின் பின்னரும் நாங்கள் இப்படியே செயற்பட வேண்டியது அவசியம்”.
மேலும் பிரெக்ஸிற் உடன்படிக்கை தொடர்பாக பிரித்தானிய அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் புதிய ஆலோசனைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாகவும் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.