உணவகத்தில் பிரித்தானிய அரச தம்பதியினருக்கு அனுமதி மறுப்பு!
In இங்கிலாந்து December 29, 2019 8:29 am GMT 0 Comments 3219 by : Benitlas

கனடாவிற்கு சுற்றுலா சென்றுள்ள பிரித்தானிய அரச குடும்பத்திற்கு உணவகம் ஒன்றில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய இளவரசர் ஹரி குடும்பத்தை கனடா பிரதமரே வரவேற்றுள்ள நிலையில், உணவகம் ஒன்று அவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது.
வன்கூவரிலுள்ள Deep Cove Chalet என்ற உணவகத்தைக் கண்ட ஹரியின் பாதுகாவலர்கள், அந்த உணவகம் ஹரி குடும்பம் உணவு உண்ண பாதுகாப்பானதாக இருக்கும் என எண்ணி அங்கு முன் பதிவு செய்வதற்காக சென்றுள்ளனர்.
குறித்த உணவகத்தை நடத்தி வரும் Pierre மற்றும் Bev Koffel ஆகியோர் ஹரி குடும்பத்தின் வேண்டுகோளை நிராகரித்துள்ளனர்.
தங்கள் உணவகம் அமைந்திருக்கும் Horth Hill என்னும் இந்த இடம் தற்போது மிகவும் பிரபலமாகி வருவதாகவும், இந்த இடத்துக்கு ஹரி குடும்பம் வருவதால் பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.