உத்தரகாண்ட் பனிச்சரிவு – இதுவரையில் 40 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு
In இந்தியா February 14, 2021 3:07 am GMT 0 Comments 1190 by : Dhackshala

உத்தரகாண்ட்டின் சமோலி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுரங்கத்திற்குள் சிக்கி உயிரிழந்த மேலும் 2 தொழிலாளர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தபோவனம் அருகே உள்ள சுரங்கத்தில் இருந்து குறித்த இரண்டு சடலங்களும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இதுவரை மொத்தம் 40 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, காணாமல்போன 171 பேர் மற்றும் சுரங்கத்தில் சிக்கியுள்ள 35 தொழிலாளர்களை மீட்பதற்கான முயற்சிகள் எட்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
எனினும் அவர்களை உயிருடன் மீட்பதற்கான சாத்தியம் குறைந்து வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.