உத்தரகாண்ட் பனிச்சரிவு ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
In இந்தியா February 15, 2021 5:36 am GMT 0 Comments 1172 by : Krushnamoorthy Dushanthini

உத்தரகாண்டில் பனிப்பாறை உடைந்து ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் காணாமல்போனோரில்இ இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மீட்புப்படை தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் ஜோஷிமாத் பகுதியில் பனிப்பாறை உடைந்து உருகியதால் தவுளிகங்கா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது.
இதனால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலங்கள், அணை, நீர்மின் திட்டக் கட்டமைப்புகள் முழுமையாக நீரில் அடித்துச் செல்லப்பட்டன. நீர்மின் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலரைக் காணவில்லை.
இந்நிலையில் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புக்குழு, மாநிலப் பேரிடர் மீட்புப்படை, இந்தோ-தீபத் எல்லை பாதுகாப்புப் பொலிஸார் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவத்தின்போது 200இற்கும் மேற்பட்டோர் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.