உத்தரகாண்ட் பனிச்சரிவு : உதவி செய்ய தயாராகவுள்ளதாக ஐ.நா சபை அறிவிப்பு!
In இந்தியா February 9, 2021 9:27 am GMT 0 Comments 1239 by : Krushnamoorthy Dushanthini

உத்தரகாண்டில் பனிப்பாறை உடைந்து உருவான வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட சேதங்களின் மீட்புப் பணிகளில் பங்களிப்பு அளிக்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளதாக ஐ.நா. பொதுச்செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவரது செய்தித் தொடா்பாளா் ஸ்டீபன் டுஜாரிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உத்தரகண்ட் மாநிலத்தில், பனிப்பாறை உடைப்பினால் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும் இந்திய அரசுக்கும் பொதுச்செயலாளா் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொண்டுள்ளாா்.
தேவைப்பட்டால் தொடா்ந்து மீட்புபணிகளிலும், தற்போது காணாமல் போனவா்களை மீட்பது தொடா்பாகவும் உதவி புரியவும், அந்தப்பணிகளில் பங்களிப்பு அளிக்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
குட்டெரெஸின் அறிக்கைக்கு பதிலளித்த இந்தியாவுக்கான ஐ.நா. சபை தூதரும் நிரந்தர பிரதிநிதியுமான டி.எஸ்.திருமூா்த்தி கூறுகையில் “உத்தரகண்ட் பனிப்பாறை உடைப்பினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடா்பான இரங்கலைத் தெரிவித்து ஐ.நா.சபையின் பொதுச்செயலாளா் வெளிப்படுத்திய ஆழமான உணா்வுகளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.