உத்தரப்பிரதேசத்தில் மறு வாக்குப்பதிவு
In இந்தியா May 5, 2019 8:41 am GMT 0 Comments 2448 by : Yuganthini

உத்தரப்பிரதேசத்தின் 8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையகம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த எட்டு வாக்குச்சாவடிகளிலும் எதிர்வரும் 6ஆம் திகதி மறு வாக்குப்பதிவு நடைபெறுமென தேர்தல் ஆணையகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குறித்த தேர்தல் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6 மணிக்கு நிறைவு பெறுமெனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷாஜஹான்பூர் மக்களவைத் தொகுதியிலுள்ள 289ஆம் எண் ஜலாலாபாத் பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி, 68 மற்றும் 327 ஆகிய திஹார் பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகள், 368 மற்றும் 351 ஆகிய போவாயன் பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகள், 140,255 மற்றும் 371 ஆகிய தத்ரௌலா பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகள் ஆகியவற்றிலேயே மறு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.