உமா மகேசுவர விரதம்

சிவசக்தி தத்துவத்தை விளக்கும் உமாமகேசுவர வடிவத்தை, புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் வழிபடுவதை ‘உமாமகேசுவர விரதம்’ என்கின்றனர்.
சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களான சோமவார விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார கௌரி விரதம், உமா மகேசுவர விரதம் எனும் எட்டு விரதங்களுள், உமா மகேசுவர விரதம் மிகவும் உயர்வானது.
இவ்விரதம் மேற்கொள்பவர்கள், விரத நாளில் வழிபாடு முடிந்ததும், ஏழைகளுக்கு உணவிட்டு, அவர்கள் சாப்பிட்ட பிறகே உணவருந்த வேண்டும்.
மகாலட்சுமியைப் பிரிந்த திருமால், கௌதம முனிவரின் ஆலோசனைப்படி உமாமகேசுவர விரதம் இருந்து, பின்னர் திருமகளை அடைந்தார். எனவே, கருத்து வேறுபாடுகளுடன் பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேர்தல், பிரிந்த குடும்பத்தினர் ஒன்றிணைதல், பிரிந்த நண்பர்கள் சேர்தல் போன்றவைகளுக்கு இந்த விரதம் முதன்மையானதாக இருக்கிறது.
இவ்விரதத்தினைத் தொடர்ந்து பதினாறு வருடங்கள் செய்பவர்களுக்கு, அவர்கள் வேண்டிய வளங்கள் அனைத்தும் கிடைக்கும் என்கின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.