உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில் வெளியாகும்: பல்கலைக்கழக அனுமதி செம்டெம்பரில்!

2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிாியர் ஜீ.எல். பீரிஸ் தொிவித்துள்ளார்.
மல்வத்து அஸ்கிரிய தேரரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக் கழகத்திற்கு தகுதிபெறும் மாணவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியைப் பெறுவரெனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் மார்ச்சில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் இதற்கான பெறுபேறுகளை ஜூனில் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.