பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கவின் வில்லியம்ஸன் பதவிநீக்கம்!
In இங்கிலாந்து May 2, 2019 3:52 am GMT 0 Comments 3078 by : Varshini
பிரிட்டனின் 5G நெற்வேர்க்கைக் கட்டமைப்பதற்கு சீனத் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாவியை அனுமதிக்கும் திட்டங்களை வெளிப்படையாக அறிவித்ததற்காக பாதுகாப்பு செயலாளராக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கவின் வில்லியம்ஸனை, பிரதமர் தெரேசா மே பதவி நீக்கியுள்ளார்.புதிய 5ஜி வலையமைப்பை உருவாக்குவதற்காக, சீனத் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாவியை அனுமதிப்பதற்கு பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான உயர்மட்ட தகவல்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
நேற்று (புதன்கிழமை) இவர் பதவிநீக்கப்பட்டுள்ளதோடு, புதிய பாதுகாப்பு அமைச்சராக பென்னி மோர்டன்ட் நியமிக்கப்படவுள்ளதாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. கவின் வில்லியம்ஸன் மீது வைத்திருந்த நம்பிக்கையை பிரதமர் இழந்துவிட்டதாகவும் டவுனிங் ஸ்ட்ரீட் கூறியுள்ளது.
எனினும், குறித்த தகவல் கசிவை கவின் வில்லியம்ஸன் முற்றாக மறுத்துள்ளார். அத்தோடு, முறையான விசாரணைகளின் மூலம் தமது நிலைப்பாட்டை நிரூபிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டுமுதல் கவின் வில்லியம்ஸன் பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.