உயர் நீதிமன்ற கட்டட தீ விபத்து – ஐவர் குறித்து விசாரணை !
In இலங்கை January 12, 2021 11:57 am GMT 0 Comments 1469 by : Jeyachandran Vithushan

கொழும்பில் உள்ள உயர் நீதிமன்ற கட்டடத்தில் ஏற்பட்ட தீ பரவலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய சந்தேக நபர்கள் ஐவர் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ பரவல் தொடர்பாக இதுவரை முன்னெடுக்கப்பட்ட குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் விசாரணைகளுக்கு மேலதிகமாக இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதவேளை உயர் நீதிமன்ற கட்டடத்தில் வீசப்பட்ட சிகரெட்டில் இருந்தே தீ பரவியதாகக் கூறப்படுவதை மறுக்க முடியாது என அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தீ பரவல் எரிபொருள் அல்லது மின் ஒழுக்கினால் ஏற்படவில்லையென உறுதியாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற கட்டடத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், உயர் நீதிமன்ற வளாகத்தில் இரகசியமாக புகைபிடித்துள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
உயர் நீதிமன்ற கட்டடத்தில் சிதைவடைந்த பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பகுதியில் கடந்த வருடம் டிசம்பர் 15 ஆம் திகதி தீ பரவிய போதும் விரைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.