உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு 21 நீதியரசர்கள் நியமிக்கப்பட்டனர்!

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றுக்கான நீதியரசர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நியமனங்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, உயர்நீதிமன்றத்துக்கு ஆறு நீதியரசர்களுக்கான நியமனங்கள் இன்று வழங்கப்பட்டதுடன் மேலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு 14 நீதியரசர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நீதியரசர் அர்ஜுன அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.