உயிரிழந்த மலையேறிகளின் சடலங்கள் தென்கொரியாவிற்கு கொண்டுசெல்லப்பட்டன!
In உலகம் October 17, 2018 6:19 am GMT 0 Comments 1553 by : Farwin Hanaa
இமயமலைப் பகுதிகளில் ஏற்பட்ட சூறாவளியால் உயிரிழந்த ஐந்து தென்கொரிய மலையேறிகளின் சடலங்கள் இன்று (புதன்கிழமை) அவர்களுடைய தாயகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கடந்த வாரம் நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட அசாதாரண பலத்த காற்று சூறாவளியாக உருப்பெற்றுள்ளது.
இந்நிலையில், குறித்த சூறாவளியானது இமயமலைப் பகுதியை கடுமையாக தாக்கியுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளில் ஏற்பட்ட மிகவும் மோசமான குறித்த சூறாவளியானது, நான்கு நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட ஒன்பது மலையேறிகளின் உயிர்களையும் காவுவாங்கியுள்ளது.
குறித்த மலையேறிகளை கிம் சங் ஹோ என்ற தென்கொரிய மலையேறியே தலைமைத் தாங்கி பயணத்தை முன்னெடுத்துள்ளார்.
இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு உலகில் மேலதிக செயற்கையான ஒக்சிசன் தாங்கிகள் இல்லாமல் உலகின் மிக உயரமான 14 மலைகளை ஏறிய வேகமான மனிதர் என்று பெயர் பெற்றவரென்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.