உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய பொலிஸார்: நெகிழ்ச்சியான சம்பவம்
பிரேசிலில் பிறந்து 21 நாட்களேயான குழந்தையொன்று மூச்சுத்திணறி உயிருக்கு போராடியுள்ளது.
அக்குழந்தையை பொலிஸார் காப்பாற்றிய நெகிழ்ச்சியாக சம்பவம் தொடர்பான காணொளியொன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பிரேசிலின் சாவோ பாலோ பகுதியில் குழந்தையின் தாயும் தந்தையும் குழந்தையை தூக்கிக்கொண்டு இராணுவ பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர்.
சுவாசிக்க முடியாமல் காணப்பட்ட அக்குழந்தை இறந்துவிட்டதாக தாய் கதறியுள்ளார். எனினும், பொலிஸார் நிதானமாக குழந்தையை தட்டிக்கொடுத்து இயல்பு நிலைக்கு கொண்டுவந்துள்ளனர். குழந்தை சுவாசிக்க ஆரம்பித்தவுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சாவோ பாலோ பொலிஸார் தமது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.