உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு மைத்திரி ஆட்சியே முழுப்பொறுப்பு: முன்னாள் ஜனாதிபதி
In ஆசிரியர் தெரிவு April 30, 2019 4:21 am GMT 0 Comments 2821 by : Risha

இலங்கையில் அரங்கேறிய உயிர்த்த ஞாயிறுதின கொலைவெறி தாக்குதல்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியே முழுப் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதியும், தேசிய நல்லிணக்கச் செயலணியின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த ஒக்ரோபர் மாதம் ஜனாதிபதி மைத்திரி அரங்கேற்றிய சர்வாதிகார ஆட்சியால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டத்துறை பின்னடைவை சந்தித்ததாகவும், இதுவே ஐ.எஸ்.-இன் ஊடுருவலுக்கு வழிவகுத்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
தான் நாட்டில் இல்லாத நேரம் இந்த தாக்குதல்கள் நடைபெற்றதால், ஏனைய அதிகாரிகளை பதவி விலகுங்கள் என்று கூறி ஜனாதிபதி தப்பிவிட முடியாது.
நாட்டின் அரசியல் நல்லிணக்கத்தை ஜனாதிபதி கடந்த ஒக்டோபர் மாதம் சிதைத்தார். தற்போது இன,மத நல்லிணக்கத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிதைத்துள்ளனர். இரக்க குணமற்ற ஐ.எஸ். பயங்கரவாதிகளை முற்றாக ஒழிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.