உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வவுனியாவில் மே தின நிகழ்வு!
In இலங்கை May 1, 2019 9:15 am GMT 0 Comments 2302 by : Dhackshala
உயிர்த்த ஞாயிறன்று உயிர்நீத்த உறவுகளுக்கும் நகரசபை ஊழியர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக வவுனியாவில் மே தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு, பசுமை தொழிலாளர் நலன்புரிச்சங்கம் உட்பட 8 தொழிற்சங்கங்கள் இணைந்து வவுனியாவில் பிரத்தியேகமான இடத்தில் மேதின நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது வவுனியா நகரசபையின் கொல்கள கழிவுக்குழியினுள் விழுந்து மரணமடைந்த சுகாதார தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக அவர்களின் திருவுருவப்படத்திற்கு ஏற்பாட்டுக் குழுவினரால் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் அஞ்சலி உரையினையும் மேதின உரைகளையும் ஆற்றினர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.