உருமாறிய கொரோனா வைரஸூக்கு எதிராக நோவாவேக்ஸ் தடுப்புமருந்து 89.3 சதவீதம் செயற்படுகின்றது!
In இங்கிலாந்து January 29, 2021 7:27 am GMT 0 Comments 1894 by : Anojkiyan

புதிய மாறுபாடான உருமாறிய கொரோனா வைரஸூக்கு எதிராக நோவாவேக்ஸ் தடுப்புமருந்து 89.3 சதவீதம் செயற்திறனோடு இருப்பது பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
18 முதல் 84 வயது வரையிலான பல்வேறு வயதுடையவர்கள் அடங்கிய, 15,000 பேர் கலந்து கொண்ட மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில், கொரோனா வைரஸுக்கு எதிராக நோவாவேக்ஸ் தடுப்பூசி 89.3 சதவீதம் செயற்திறனைக் காட்டியிருக்கிறது. இதில் 27 சதவீதத்தினர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என நோவாவேக்ஸ் கூறியுள்ளது.
கொரோனா வைரஸின் தென்னாபிரிக்கத் திரிபால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பங்கெடுத்த பரிசோதனையில், ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்படாதவர்களிடம் 60 சதவீதம் செயற்திறனைக் காட்டியிருக்கிறது.
நோவாவேக்ஸ் மருந்துக்கு பிரித்தானியாவின் மருந்து மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்கு கட்டுப்பாட்டு முகமை அனுமதி வழங்கிய பின் ஸ்டாக்டன்னில் இருக்கும் உற்பத்தி ஆலையில், அதன் உற்பத்தி மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும். இந்த புதிய நோவாவேக்ஸ் தடுப்பு மருந்திலும் 60 மில்லியன் டோஸ்களை முன்பதிவு செய்திருக்கிறது.
ஏற்கனவே பிரித்தானியா, அஸ்ட்ராஸெனெகா தடுப்பு மருந்து, ஃபைஸர்- பயோஎன்டெக், அமெரிக்காவின் மொடர்னா என இதுவரை மூன்று தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.