உருமாறிய கொரோனா வைரஸை ஃபைஸர் தடுப்பூசி கட்டுப்படுத்துகிறது!

உருமாறிய கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டை, ஃபைஸர் தடுப்பூசி கட்டுப்படுத்துவதாக ஃபைஸர் நிறுவன தலைமை விஞ்ஞானி டாக்டர் பிலிப் டோர்மிட்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது உலகநாடுகளை அச்சத்தில் ஆழ்த்திவரும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் வேலை செய்யுமா? என்ற சந்தேகம் மருத்துவ நிபுணர்களிடம் இருந்து வந்தது. எனவே அதற்கான ஆய்வுகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இதில் கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டுக்கு வந்துள்ள ஃபைஸர் தடுப்பூசி, இந்த உருமாறிய கொரோனாவையும் கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த தடுப்பூசி போடப்பட்ட 20 பேரின் ரத்த மாதிரிகளைக்கொண்டு மேற்படி வைரசுக்கு எதிராக ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் இந்த இரத்த மாதிரிகள் உருமாறிய புதிய வைரஸை வெற்றிகரமாக தடுப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
அதேநேரம் இந்த ஆய்வு முடிவுகள் முதற்கட்டமாக கிடைத்த தகவல்கள்தான் எனவும், இது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்த பின்னரே இறுதி முடிவு தெரியவரும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.