உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியின் விபரம் அறிவிப்பு!
In விளையாட்டு April 23, 2019 3:11 am GMT 0 Comments 2926 by : Anojkiyan

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை, கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இத்தொடர், குறித்த ஒவ்வொறு புதிய அறிவிப்பினையும் இரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில், உலகக்கிண்ண தொடருக்கான ஒவ்வொரு அணிகளின் விபரங்களும் தொடர்ச்சியாக அறிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது வரை, நியூஸிலாந்து, அவுஸ்ரேலியா, இந்தியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளின் உலகக்கிண்ண அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது உலகக்கிண்ண தொடரில் விளையாடப் போகும் எதிர்பார்ப்பு மிக்க வளர்ந்து வரும் அணியான ஆப்கானிஸ்தான் அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சரி வாருங்கள், முதலாவது முறையாக உலகக்கிண்ண தொடரில் விளையாடப் போகும் ஆப்கானிஸ்தான் அணியின் விபரத்தை பார்க்கலாம்,
எதிர்பார்ப்பு மிக்க ஆப்கானிஸ்தான் அணியில், வேகப்பந்து வீச்சாளரான ஹமீட் ஹசன் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, குல்பதீன் நய்ப் தலைமையின் கீழ் விளையாடப் போகும் ஆப்கானிஸ்தான் அணியில், முன்னணி வீரர்களான மொஹமட் செஷாட், ரஷீத்கான், முஜிப் உர் ரஹ்மான் ஆகிய வீரர்களும் உள்ளனர்.
சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,
குல்பதீன் நய்ப் தலைமையிலான அணியில், மொஹமட் செஷாட், நுர் அலி சத்ரான், ஹஸ்ரதுல்லா சஷாய், ரஹமட் ஷா, அஸ்கர் ஆப்கான், ஹஸ்மதுல்லா சயீடி, நஜிபுல்லா சத்ரான், சமியுல்லா ஷின்வாரி, மொஹமட் நபி, ரஷீத்கான், தவ்லட் சத்ரான், அப்டப் அலாம், ஹமீட் ஹசான், முஜிப் உர் ரஹ்மான் ஆகியோர் உள்ளளனர்.
எதிர்வரும் உலகக்கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தான் அணி, தனது முதலாவது போட்டியில் அவுஸ்ரேலியா அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இப்போட்டி எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி, பிரிஸ்டொல் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், 45 லீக் போட்டிகள் மற்றும் 3 வெளியேற்று போட்டிகள் என 48 போட்டிகள், சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.