உலகக் கிண்ண தொடரில் இந்திய அணியில் முதலுதவி பெட்டியாக செயற்படுவேன் – தினேஷ் கார்த்திக்
In விளையாட்டு April 18, 2019 8:25 am GMT 0 Comments 1578 by : adminsrilanka
உலகக் கிண்ணத்திற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், ரிஷப் பந்த், அம்பதி ராயுடு ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம்.
விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. தினேஷ் கார்த்திக் மாற்று விக்கெட் காப்பாளராக சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உலகக் கிண்ண அணியில் இடம்பிடித்தாலும், அணியில் தோனி இருக்க தான் ஒரு முதலுதவி பெட்டி போலத்தான் இருப்பேன் என்று தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
உலகக்கிண்ண அணியில் இடம்பிடித்தது குறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில் ‘‘உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியில் இடம் பிடிப்பது எப்போதுமே மகிழ்ச்சியான தருணம்.
நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். தேர்வு செய்ததற்கு நன்றி. நான் கடந்த 2017-ம் ஆண்டு இந்திய அணிக்கு திரும்பியதில் இருந்தே, உலகக் கிண்ணத்திற்கான என்னுடைய பயணம் தொடங்கியது. நான் ஏதாவது சிறப்பாக செய்தால் உலகக்கிண்ணத்திற்கான அணியில் இடம் பிடிக்க முடியும் என்று நம்பினேன்.
அணி நிர்வாகம் என்னிடம் எதனை எதிர்பார்க்கிறதோ அதனை நிறைவேற்ற முயற்சி செய்வேன். தோனி அணியில் இருக்க, தான் ஒரு முதலுதவி சிகிச்சை பெட்டி போல்தான் அணியுடன் பயணம் செய்வேன்.
டோனி காயம் அடைந்தால், அன்றைய தினம் நான் காயத்திற்கான கட்டாக (Band-Aid) இருப்பேன். ஆனால் என்னால் 4-வது இடத்தில் களம் இறங்கி துடுப்பெடுத்தாட முடியும்.
அல்லது பினிஷராக செயல்பட முடியும். எந்த வாய்ப்பு கிடைத்தாலும் செய்வேன். ஐபிஎல் தொடர் முடிந்த உடன் முழு துடுப்பாட்டக்காரராக செயல்பட கடுமையாக வகையில் தயாராகுவேன்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.