உலகளவில் அதிகம் பேர் பின்பற்றும் அரசியல் தலைவராக மோடி இரண்டாவது இடத்தில்
In அறிவியல் May 8, 2019 10:42 am GMT 0 Comments 5593 by : adminsrilanka

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பின்னுக்குத்தள்ளி உலகளவில் அதிகம் பேர் பின்பற்றும் அரசியல் தலைவராக இரண்டாமித்திற்கு முன்னேறியுள்ளார்.
ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நரேந்திர மோடியை சுமார் 110,912,648 மில்லியன் பேர் பின்பற்றுகின்றனர் என SEMrush எனும் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
அதேநேரம் பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் 13.7 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதாக ஃபேஸ்புக் உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுக்க சுமார் 110 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களை கொண்டு பிரதமர் நரேந்திர மோடி டொனால்ட் ட்ரம்ப்பை பின்னுக்குத் தள்ளியிருக்கின்றார்.
டொனால்ட் ட்ரம்ப்பை உலகளவில் சுமார் 96 மில்லியன் பேர் பின்பற்றுகின்றனர். ஆனால் டுவிட்டரில் அதிகம் பேர் பின்பற்றும் அரசியல் தலைவர்களில் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது இடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகளவில் அதிகம் பேர் பின்பற்றும் அரசியல் தலைவராக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முதலிடத்தில் இருக்கின்றார். சமூக வலைதளங்களில் பராக் ஒபாமாவை சுமார் 182,710,777 பேர் பின்பற்றுகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.