உலகளாவிய உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள எஸ்ரிங்க்ஷன் ரெபல்லியன் உறுப்பினர்கள்
In இங்கிலாந்து November 18, 2019 2:56 pm GMT 0 Comments 1513 by : shiyani

காலநிலை மாற்றத்துக்கு எதிராக எஸ்ரிங்க்ஷன் ரெபல்லியன் குழு உறுப்பினர்கள் பிரித்தானிய அரசியல் கட்சிகளின் தலைமைகங்களுக்கு வெளியே உலகளாவிய உண்ணாவிரதப் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
டிசெம்பர் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் காலநிலை மற்றும் அவசரநிலையைச் சமாளிப்பதில் மேலும் வலுவான கொள்கைகளுக்கு அழுத்தம் கொடுத்து இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியா, நியூசிலாந்து, நைஜீரியா, பாகிஸ்தான், போலந்து மற்றும் ஸ்பெயின் உட்பட 26 நாடுகளில் 300 க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் குறைந்தது ஒரு வாரமாவது உண்ணாவிரதத்தில் பங்கேற்க உள்ளனர்.
தொழிற்கட்சியின் லண்டன் தலைமையகத்தில் ஆக்கிரமித்துள்ள இந்த நடவடிக்கை, ஒரு வார கால உண்ணாவிரதத்தை மையமாகக் கொண்ட எஸ்ரிங்க்ஷன் ரெபல்லியன் குழுவின் பரந்த உலகளாவிய போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து உறுப்பினர்களும் அரசியல் கட்சி தலைமையகங்களுக்கும் வெளியே இருப்பார்கள் எனவும் அரசியல் தலைவர்கள் தங்களை சந்தித்து தமது மூன்று கோரிக்கைகளைப் பற்றி பேசவேண்டும் எனவும் எஸ்ரிங்க்ஷன் ரெபல்லியன் தெரிவித்துள்ளது.
காலநிலை அவசரகால நிலையைப் பற்றி அரசாங்கங்கள் உண்மையைச் சொல்வது, 2025 ஆம் ஆண்டில் பசுமையில்ல வாயு வெளியேற்றத்தை நிகர பூஜ்ஜியமாகக் குறைப்பதுடன் பல்லுயிர் இழப்பை நிறுத்துவதற்கான உறுதி மற்றும் அரசியலுக்கு அப்பால் நகர்ந்து குடிமக்களின் கூட்டங்கள் போன்ற கருத்துக்கள் வழியாக பிரச்சினையை தீர்ப்பது ஆகிய 3 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பிரெக்ஸிற் ஆதிக்கம் செலுத்தும் தேர்தலில் காலநிலை மாற்றத்தை முன்னிலைப்படுத்தும் நோக்கத்துடன் டிசெம்பர் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு முன்னதாக போராட்டங்களை முன்னெடுப்பதற்கு சுற்றுசூழல் ஆர்வலர்கள் தீர்மானித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.