உலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை முன்னேற்றம்
In ஆசிரியர் தெரிவு April 20, 2019 2:33 am GMT 0 Comments 2344 by : Dhackshala

2019ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது.
பாரிஸை தலைமையிடமாகக் கொண்ட எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு இந்த ஆண்டுக்கான ஊடக சுதந்திர பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி 180 நாடுகளை உள்ளடக்கிய இந்த பட்டியலில் இலங்கை 5 இடங்கள் முன்னேறி 126ஆவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 131ஆவது இடத்தில் இருந்த இலங்கை இந்த ஆண்டு ஐந்து இடங்கள் முன்னேறியிருக்கிறது.
ஊடக சுதந்திர பட்டியலில் இம்முறை நோர்வே முதலிடத்திலும் அதையடுத்து பின்லாந்து, சுவீடன், நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளும் உள்ளன.
இறுதியாக 180ஆவது இடத்தில் துர்க்மெனிஸ்தான் உள்ளது. அதனுடன் கடைசி இடங்களில் வடகொரியா, எரித்ரியா, சீனா, வியட்னாம் ஆகிய நாடுகள் உள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.