உலகிண்ண இறுதிப்போட்டியில் இடையூறு ஏற்படுத்தியவர்களுக்கு சிறை தண்டனை!

ரஸ்யாவில் நடைபெற்ற உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்து போட்டிக்கு இடையூறு ஏற்படுத்திய நால்வருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் – குரேஷிய அணிகளுக்கிடையிலான உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி கடந்த 15ஆம் திகதி ரஸ்ய தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்றது.
இந்த போட்டியினை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் மற்றும் குரேஷிய ஜனாதிபதி கொலின் டி கிராபர் ஆகியோர் நேரடியாக கண்டுகளித்தனர்.
இந்தநிலையில் போட்டியின் இரண்டாவது பாதி ஆட்டத்தின் போது திடீரென பொலீஸ் சீருடையில் நால்வர் மைதானத்திற்குள் நுழைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர்களை பொலீசார் மைதானத்தை விட்டு வெளியேற்றினார்.
இந்தநிலையில் குறித்த நால்வருக்கும் அந்நாட்டு நீதிமன்றம் 15 நாள் சிறை தண்டனையும், மூன்று ஆண்டுகள் எவ்வித போட்டியையும் நேரில் பார்வையிடுவதற்கு தடையும் விதித்துள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவத்திற்கு ‘புஸி ரயட்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.