உலகின் குறைவான ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு 11ஆவது இடம்!

உலகின் குறைவான ஊழல் நிறைந்த நாடுகளின் புதிய தரவரிசைப் பட்டியலில், கனடா 11ஆவது இடத்தில் உள்ளது.
2020 சிபிஐ அறிக்கையில், 77 புள்ளிகளுடன் கனடா 11ஆவது இடத்தைப் பிடித்தது. இது பிரித்தானியா அவுஸ்ரேலியா மற்றும் ஹொங்கொங் போல அதே இடத்தில் வைக்கப்பட்டது.
இது பட்டியலில் மிக உயர்ந்த நிலையில் இருந்தாலும், கனடா 2018 முதல் தரவரிசையில் வீழ்ச்சியடைந்துள்ளது. முன்பு கனடா 9ஆவது இடத்தில் இருந்தது. அதே நேரத்தில் அமெரிக்கா முதல் 25 இடங்களில் உள்ளது.
இந்த ஆண்டு, நியூசிலாந்து மற்றும் டென்மார்க் 88 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தன. பின்லாந்து, சுவிஸ்லாந்து, சிங்கப்பூர் மற்றும் சுவீடன் நெருக்கமாக உள்ளன. நம்பத்தகுந்த முதல் பத்து நாடுகளாக நோர்வே, நெதர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் ஜேர்மனி உள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.