உலகின் மிகவும் உயரமான மரம் கண்டுபிடிப்பு!

உலகின் மிக உயரமான மரம் அமேசன் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் பிரேசில் நாடுகளைச் சேர்ந்த தாவரவியல் ஆய்வாளர்களினால் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமேசன் காடுகளின் வடக்குப் பிராந்தியத்தில் உள்ள ஜாரி ஆற்றங்கரையில் இந்த மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டினிஸியா எக்ஸல்சா என்ற மரமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 400 ஆண்டுகளைக் கடந்த இந்த மரம் தற்போது 290 அடிகளைக் கடந்து வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மரம் சுமார் 40 தொன் வரை எடை கொண்டதாக இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.