உலகில் ஒவ்வொரு நாடும் தன் சுய கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் – ராஜ்நாத் சிங்
In இந்தியா December 11, 2020 5:35 am GMT 0 Comments 1416 by : Krushnamoorthy Dushanthini

உலகில் அமைதி நிலவ வேண்டுமானால் ஒவ்வொரு நாடும் தன் நடவடிக்கைகளில் சுய கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ஆசியான்’ எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் மற்றும் இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகள் அடங்கிய “ஏ.டி.எம்.எம்,பிளஸ்” எனப்படும் ஆசியான் இராணுவ அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தற்போது இந்த பிராந்தியத்தில் பல நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாம் பரஸ்பரம் நம்பிக்கை மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். நம் ஒவ்வொரு செயலி லும் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும். அதேநேரத்தில் பிரச்சினைகள் தீவிரமாகாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
அதுதான் அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்பை உருவாக்கும். சர்வதேச சட்ட விதிமுறைகள் மீறல், கடல் பாதுகாப்பு, பயங்கரவாதம் என பல பிரச்சினைகள் சவால்கள் நம் முன் உள்ளன.
இவற்றை நாம் ஒரு குழுவாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும்.’வசுதைவக குடும்பகம்’ எனப்படும் இந்த உலகமே ஒரு குடும்பம் மற்றும் ‘சர்வோ சுகினா பவந்து’ எனப்படும் அனைருக்கும் அமைதி ஆகியவை இந்தியாவின் அடிப்படை கொள்கைகள். நாம் மற்றவர்களை மதிப்பது, வெளிப்படையாக திறந்த மனத்துடன் செயல்படுவது ஆகியவை இதில் அடங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.