உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பொங்கல் வாழ்த்து!
In இங்கிலாந்து January 14, 2021 6:00 am GMT 0 Comments 1884 by : Anojkiyan

நாட்டிலும், உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
உழவர் திருநாளாகக் கொண்டாடப்படும் இன்றைய நாளில் பொங்கல் பொங்கி படைத்து சூரியனை வழிபட்டு, சூரியனுக்கும் உழவர்களுக்கும் நன்றி சொல்லி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில், பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தமிழ் மக்களுக்கு டுவிட்டர் பக்கத்தில் காணொளியின் ஊடாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘எங்கள் அருமையான பிரித்தானிய தமிழ் சமூகத்திற்கும், உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும், நான் மிகவும் மகிழ்ச்சியான தைப் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நீங்கள் கூடிவருகையில், கொண்டாடவும் எதிர்நோக்கவும் நிறைய இருக்கிறது என்று நான் நம்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
I want to wish Tamils in the UK and around the world a happy Thai Pongal. pic.twitter.com/GCROsgqI9d
— Boris Johnson (@BorisJohnson) January 13, 2021
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.