உலகைச் சுற்றிப்பார்க்க ஆசைப்படும் கோடீஸ்வர முதியவர்!

அதிஸ்டலாபச் சீட்டு மூலம் கிடைத்த பணத்தினைக் கொண்டு உலகைச் சுற்றிப்பார்க்க விரும்புவதாக முதியவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
Calgary-ஐ சேர்ந்த லியோனர்ட் பீட்டர் என்பவர் $4 பணத்தை கொடுத்து அதிஸ்டலாபச் சீட்டு வாங்கியுள்ளார்.
அதில் பீட்டருக்கு $12.2 மில்லியனில் அரைவாசி பரிசான $6.1 மில்லியனை பெறும் ஜாக்பாட் அடித்துள்ளது.
மீதி பரிசு பணம் Quebec-ஐ சேர்ந்த ஒருவருக்கு கிடைக்கவுள்ளது.
இது குறித்து பீட்டர் கூறுகையில், உலகம் முழுவதும் சுற்றி வந்து எல்லாவற்றையும் காண வேண்டும் என்பதே எனது கனவு.
இந்த பணத்தை வைத்து அதை தான் செய்யவுள்ளேன், முதலில் அயர்லாந்துக்கு சென்று நண்பர்களின் குடும்பத்தினரை சந்திக்கவுள்ளேன்“ என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.