உலக வெப்பமயமாதலை தடுக்க தொடர் போராட்டம்
In இங்கிலாந்து April 19, 2019 10:02 am GMT 0 Comments 2346 by : Varshini
உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் காலநிலைமாற்ற ஆதரவாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் வலுப்பெற்றுள்ளது.
கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக நேற்று (வியாழக்கிழமை) பி.பி.சி. ஊடக நிறுவனத்திற்கு முன்னால் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘உண்மையை கூறுங்கள்’ என்ற வாசகம் அடங்கிய பதாதையை தாங்கியவாறு கோஷமிட்டனர்.
உலக வெப்பமயமாதலுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டக்கார்களின் கோரிக்கையாக உள்ளது.
இதேவேளை, விருதுவென்ற பிரித்தானிய நடிகையான எம்மா தொம்சன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். உலக வெப்பமயமாதலுக்கு எதிராக இப்போதே போதிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் இனிவரும் தலைமுறை மோசமான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் சைக்கிளின் மூலம் லண்டன் வீதிகளை சுற்றிவந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பயணிகளுக்கும் இடையில் முறுகல் நிலையும் ஏற்பட்டது. இதுவரை முன்னெடுக்கப்பட்ட ஆரப்பாட்டத்தில் சுமார் 500 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். 10 பேர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தேவையற்ற இடையூறுகளை விளைவிப்பதாக குறிப்பிடும் லண்டன் பொலிஸார், பாதுகாப்பு கடமைகளுக்காக தமது உத்தியோகத்தர்களின் விடுமுறையை ரத்துசெய்துள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.