உல்ப்ஸ்பேர்க் – மைன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு
In உதைப்பந்தாட்டம் September 27, 2018 5:01 am GMT 0 Comments 1496 by : Anojkiyan
ஒவ்வொரு நாடுகளில் நடத்தப்படும் தனித்துவமான கால்பந்து லீக் தொடர்களில், அந்நாட்டு முன்னணி கால்பந்து அணிகள் விளையாடுவது வழக்கம்.
அவ்வாறான் 55ஆண்டுகள் பழமையான புஃண்டர்ஸ்லிகா கால்பந்து தொடர், தற்போது ஜேர்மனியில மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இதில் மொத்தம் 18 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த தொடரில் 27 முறைகள் சம்பியன் பட்டம் வென்று, அசைக்க முடியாத அணியாக பேயர்ன் முனிச் அணி திகழ்ந்து வருகின்றது.
இந்நிலையில் இத்தொடரின் 2018-2019ஆம் ஆண்டு பருவக் காலத்துக்கான தொடர், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.
இதில் நேற்று நடைபெற்ற போட்டியொன்றில், உல்ப்ஸ்பேர்க் மற்றும் மைன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இரு அணிகளுக்கு கோல் போடுவதற்கான சமவாய்ப்புகள் கிடைத்தன.
ஆனால், அந்த வாய்ப்புக்கள் எதிரணி, கோல் காப்பளார்களின் துணையுடன் முறியடிக்கப்பட்டன. இதற்கமைய போட்டியின் நிறைவில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால் போட்டி கோல் எதுவுமின்றி சமநிலையில் நிறைவடைந்தது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.