உள்நாட்டு விசாரணைக்கு இணங்கி இருக்காவிட்டால் சர்வதேச விசாரணை இடம்பெற்றிருக்கும் – லக்ஷ்மன்
In இலங்கை November 25, 2020 5:42 am GMT 0 Comments 1498 by : Jeyachandran Vithushan

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஆராய உள்நாட்டு விசாரணைக்கு இணங்கி இருக்காவிட்டால் சர்வதேச விசாரணை இடம்பெற்றிருக்கும் என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்று நிரைவேற்றப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுவரும் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாததில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது. இருப்பினும் தற்போது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவாகியுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் அதே நிலைமை தொடராது என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதிகார பகிர்வினை வழங்கினால் நாடு பிளவுபடாது என்றும் மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.