உள்ளூராட்சி சபைகளின் முதல் அமர்வுக்கான திகதி அறிவிப்பு!
In இலங்கை March 14, 2018 3:22 pm GMT 0 Comments 1798 by : Vithushagan

326 உள்ளூராட்சி சபைகளுக்கான முதல் அமர்வு எதிர்வரும் 22 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் சர்ச்சையுள்ள 15 சபைகள் இதில் இதில் உள்ளடங்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூராட்சிசபைத் தேர்தல்கள் 340 இற்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 24 மாநகர சபைகளாகவும், 41 நகர சபைகளாகவும் உள்ளன. பிரதேச சபைகளின் எண்ணிக்கை 275 ஆகும்.
உள்ளூராட்சி சபைகள் அனைத்துக்கும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் 8325 பேர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் 5061 பேர் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். ஏனைய 3264 பேர் விகிதாசார முறையிலும் தெரிவாகியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.