ஊடகவியலாளரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளும் அரசியல் தலைவர்கள்!
In இங்கிலாந்து April 24, 2019 9:59 am GMT 0 Comments 2108 by : shiyani

வடக்கு அயர்லாந்தின் லண்டன்டெர்ரி நகரத்தில் ஏற்பட்ட கலகத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்ட பெண் ஊடகவியலாளராக லைரா மெக்கீ-யின் இறுதிச்சடங்கில் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இன்று பெல்பாஸ்ட் நகரில் இடம்பெறும் இறுதிச்சடங்கில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, ஐரிஷ் பிரதமர் லியோ வராத்கர் மற்றும் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.
29 வயதான லைரா மெக்கீ கடந்த வியாழக்கிழமை லண்டன்டெர்ரி நகரத்தில் இடம்பெற்ற கலகத்தை பதிவுசெய்யும் வேளையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.