ஊடகவியலாளர்களின் மனித உரிமை மீறப்பட்டுள்ளது: துருக்கி நீதிமன்றம்

துருக்கி ஊடகவியலாளர்களின் மனித உரிமையை அதிகாரிகள் மீறியுள்ளதாக துருக்கி உயர்மட்ட நீதிமன்றமொன்று தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் கருத்து சுதந்திரத்தை அதிகாரிகள் மீறியுள்ளதாக துருக்கி அரசியலமைப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியின்போது பயங்கரவாத குற்றச்சாட்டில் இரு ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த ஊடகவியலாளர்களின் பாதுகாப்பே மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நான்கு ஊடகவியலாளர்களின் மேன்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஊடக சுதந்திரத்திற்கான 180 நாடுகளின் பட்டியலில் துருக்கி 157ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.