ஊடகச் சுதந்திரம் அதிகாரத் துஷ்பிரயோகத்திலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கிறது : ஹண்ட்
In இங்கிலாந்து July 10, 2019 11:14 am GMT 0 Comments 1696 by : shiyani

சுதந்திரமான ஊடகம் அதிகாரத் துஷ்பிரயோகத்திலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதுடன் ஒரு நாட்டின் முழு திறனை வெளியிடவும் உதவுகிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் தெரிவித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொள்ளும் லண்டனில் இடம்பெறும் ஊடக சுதந்திரத்துக்கான உலகளாவிய மாநாட்டில் ஹண்ட் சுதந்திர ஊடகத்தின் நன்மைகள் குறித்து உரையாடியுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய ஹண்ட்,
ஒரு சிறந்த சுதந்திரமான ஊடகம் அதிகார துஷ்பிரயோகத்திலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதுடன் ஒரு நாட்டின் முழு திறனையும் வெளியிடவும் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கும் உதவுகிறது.
சுதந்திர ஊடகம் திறந்த கருத்து பரிமாற்றத்துக்கு சமூகத்தின் மேதைகள் தம்மை வெளிப்படுத்துவதற்கும் ஒட்டுமொத்த மக்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கும் உதவுகிறது என தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகம் என்பது எந்தவொரு ஜனநாயக சமுதாயத்தினதும் மூலக்கல்லாகும், மேலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அவசியமானது என இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ள கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலான்ட் தெரிவித்துள்ளார்.
ஊடகச் சுதந்திரத்தின் தற்போதைய நிலை மற்றும் தத்தமது சொந்த நாடுகளிலும் உலகெங்கிலும் சாதகமான மாற்றத்தைக் கொண்டுவர எடுக்கக்கூடிய நடைமுறை நடவடிக்கைகள் குறித்து இரண்டு நாட்கள் இடம்பெறும் மாநாட்டில் கலந்தாலோசிக்கப்படவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.